- Joined
- Jul 10, 2024
- Messages
- 513
அத்தியாயம் 72
''ஹாய் சார்..''
என்று பற்கள் வரிசைக் கட்ட கேசுவலான ஆங்கில வணக்கம் ஒன்றை வைத்தாள் முன்னிருந்தவனுக்கு விசா.
''ஹாய் விசா..''
என்றவனோ நாற்காலியை இழுத்துப் போட்டமர்ந்தான் டின்னரை ருசிப்பார்க்க.
''தேங்கி யூ சோ மாச் சார்.. நீங்க வருவீங்கன்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவே இல்லே.. சச் எ வண்டர்ஃபுல் பிளஸிங்ஸ் போர் அவர் லிட்டில் பிரின்ஸ்.. (such a wonderful blessing for our little prince..)''
''ஐயோ போதுமா! விட்டா நீங்க என்ன கடவுளாக்கிடுவீங்க போல.. நானும் உங்கள மாதிரி ஒரு சாதாரண மனுஷந்தானே.. எனக்கெதுக்கு இவ்ளோ பில்டப்..''
என்றவனோ உணவு தட்டிலிருந்த நூடல்ஸை ஃபோர்க்கில் சுற்றி வாயில் திணித்தான்.
''நீங்க என்னெவெனா சொல்லுங்க சார்.. உங்களே மாதிரியான நல்லவங்க இருக்கறதுனாலத்தான் இந்த முகத்துலெல்லாம் அப்பப்பே சிரிப்பையே பார்க்க முடியுது!''
என்று உணர்ச்சி பொங்க பேசிய விசாவோ ஆணவனுக்கு பின்னால் தெரிந்த உறவற்ற உறவுகளை பாசத்தோடு நோக்கினாள்.
ப்ரீதன்தான் ஏற்பாடு செய்திருந்தான் விசாவின் குட்டி பையனுக்கான பிறந்தநாளை அருகிலிருக்கும் முதியோர் காப்பகம் ஒன்றில்.
சிறப்பு விருந்தினர்கள் சிலர் வந்து கலந்துக்கொள்ள விழா கலை கட்டியிருந்தது. கூடவே, விசா நெடுநாளாக சந்திக்க விரும்பிய ஆளின் வருகையும் அரிவையவளை திக்குமுக்காட வைத்தது.
நேரம் போனது தெரியாது வந்திருந்தோர்களை கவனித்தனர் விசாவும் அவளின் பார்ட்னரும்.
வயதான விடுதி ஆட்களோ பேரன் வயசில் இருக்கின்ற சின்ன வாண்டை ஆசையாய் கையில் வாங்கி கொஞ்சி மகிழ்ந்து ஆசிர்வதித்தனர். அக்காட்சியைக் காண்கையில் விசா ஏனோ அழுதே விட்டிருந்தாள்.
யாருமற்ற அனாதையாய் திக்கற்ற நிலையில் நாடோடி வாழ்க்கை வாழ பார்த்தவளின் கையை இறுக்கமாய் பிடித்து நம்பிக்கை கொடுத்து உடன் பயணித்த ப்ரீதனை ஓடிச்சென்று கட்டிக்கொள்ள தோன்றியது தாரகையவளுக்கு.
''சத்தியமா சொல்றேன் சார்.. ப்ரீதன் மட்டும் சர்ப்ரைஸ்ன்னு சொல்லாமே நீங்கதான் வறீங்கன்னு முன்கூட்டியே சொல்லிருந்தா கண்டிப்பா இன்னைக்கு ஃபங்க்ஷன் வேறே லெவல்லே கலை கட்டியிருக்கும்..''
பெண்ணவள் சொல்லிக் கொண்டே போக, தாயவள் மடியிலிருந்த புதல்வனோ குறும்பு செய்திட ஆரம்பித்தான்.
''ஷெல் ஐ..''
என்ற பழைய ஹீரோவோ ஆசைக்கொண்டு கையை நீட்டினான் விசாவை நோக்கி வேள்வியை முன் வைத்து சின்னவனை கையில் தூக்கிட விரும்பி.
''தூக்கறது என்னே சார்.. நீங்களே கூட்டிக்கிட்டு போய் வெச்சு வளர்த்துக்கோங்க! தீனா வேணாம் மம்மிக்கு! வரவர ரொம்ப சேட்டே!''
என்றவளோ செல்லமாய் மகனின் குமட்டில் குத்தினாள்.
பெற்றவளின் பொய் கோபப்புராணம் ஒருபக்கம் ஓட, பிறந்தநாள் பையனை கையில் வாங்கி தாங்கிக் கொண்டவனின் எண்ணமோ நொடியில் அவன் கையை விட்டு போன வாழ்க்கையை நினைத்துப் பார்த்தது.
கலங்காமல் இல்லை ஆணவனின் உள்ளம் போய் சேர்ந்த காதல் மணவாட்டி ஜனனியை நிந்தித்து.
இப்படித்தானே மனோ அவனும் ஆசைப்பட்டான் பொண்டாட்டி பிள்ளையோடு குடும்பமாய் வாழ. என்செய்ய நல்லவனவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
''ஹாய் சார்.. சாப்பிட்டிங்களா.. எல்லாம் ஓகேதானே..''
என்றுக் கேட்டப்படி விசாவின் பக்கத்தில் வந்தமர்ந்தான் ப்ரீதன். காளையவனின் குரலில் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தான் மனோ.
''அதெல்லாம் இருக்கட்டும்.. இவ்ளோ அழகான மனைவி.. ஒரு வயசுலே பையன்.. கல்யாணம் ஆயிடுச்சின்னு ஏன் சொல்லலே குகா.. நான்கூட இதுநாள் வரைக்கும் நீங்க சிங்கிள்னுதான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்..''
என்றவனின் பேச்சில் மலர்ந்ததென்னவோ விசாவின் முகம்தான். இருப்பினும், சொன்னவனின் வார்த்தைகளில் தவறான புரிதல் இருக்க கண்ட பேபி சீட்டரோ அதை சரி செய்ய முற்பட்டான்.
''ஐயோ சார்.. நீங்க நினைக்கறே மாதிரி இவுங்க..''
என்றவனின் வாக்கியத்தில் குறுக்கே புகுந்தாள் விசா, மேஜைக்கு அடியில் ப்ரீதனின் கையை அழுத்தி பற்றி.
''இவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம் சார்.. வெளிப்படையா யாருக்கிட்டையும் எதையும்.. சொல்லவே மாட்டாரு.. மனசுக்குள்ளையே வெச்சுப்பாரு.. பெரிய இதயம் முரளின்னு நினைப்பு..''
விசாவின் நக்கலான குத்தலில் காரிகையவளை இமைக்காது பார்த்தான் ப்ரீதன் இதழோரம் முகிழ்நகை இழைந்தோட.
அந்திகையவள் உதிர்த்த வார்த்தைகளின் அர்த்தம் அறிந்தவன் அவளை ஏனோ இன்றைக்கு வழக்கத்தை தாண்டி கொஞ்சம் அதிகப்படியாகவே ரசித்தான்.
''என்ன ப்ரீதன் தங்கச்சி டென்ஷன் ஆகற அளவுக்கு உங்க பெர்போமன்ஸ் அடிவாங்கிருக்கு போல..''
என்றவனோ நக்கலடிக்க,
''நல்லா கேளுங்க சார்..''
என்றவளோ உண்டு முடித்து வாயை நாப்கினால் ஒற்றியெத்தாள்.
''வேணாம் சார் நீங்க ஆள் தெரியாமே சப்போர்ட் பண்றீங்க.. அப்பறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க சொல்லிட்டேன்..''
என்ற ப்ரீதனின் எச்சரிக்கையான கிண்டலில் தலையை ஆடாட்டம் ஆட்டிய மனோவோ,
''கடவுளே இந்த சார் மொரெல்லாம் தூக்கி ஒரு ஓரமா போட்டுட்டு என்னே மனோன்னே கூப்பிடுங்களேன்..''
என்று சலித்துக் கொண்டான். இறுகிய முகங்கொண்டவனை சிரிக்க வைத்தாள் விசா.
''சரி விடுங்கண்ணா.. நீங்க என்னே தங்கச்சின்னு சொல்லிட்டிங்களே.. அப்போ நான் உங்களே என் அண்ணனா தந்தெடுத்துக்கறேன்.. சரியா..''
''அப்போ நானும் சாரும் மாமா மச்சான்னா..''
''இதுவே உனக்கு சந்தேகம்தானா!''
என்று ப்ரீதனை கலாய்த்தனர் உறவை புதிதாய் பிறப்பித்துக் கொண்ட அண்ணனும் தங்கையும்.
கலகலப்பெல்லாம் ஒரு முடிவுக்கு வர மனோ கிளம்பிட தயாராகினான்.
''தேங்கி யூ சோ மாச் குகா.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃபெமிலி கேதரிங்களே கலந்துக்கிட்டிருந்திருக்கேன்.. மனசு நிறைவா இருக்கு.. மறுபடியும் இன்னொரு நாளைக்கு சந்திக்கலாம் வாய்ப்பிருந்தா..''
என்றவனோ ப்ரீதனின் கையை குலுக்க,
''என்னண்ணா.. தங்கச்சியே அப்படியே கழட்டி விட்டுட்டு போறீங்க.. அதெல்லாம் முடியாது! அண்ணி கைவசம் இங்கையே இருக்காங்க.. எப்படி கட்டிக்கறீங்களா..''
என்றவளின் புதிரில் வாசலில் நின்றிருந்த ப்ரீதனும் மனோவும் ஆர்வங்கொண்ட ஆச்சரியத்தில் காத்திருந்தனர் சுந்தரியவளின் சாய்ஸ் யாரென்று பார்க்க.
''வேறே யாரு நம்ப அமரா அக்காத்தான்.. எப்படி அண்ணா.. கட்டிக்கறீங்களா என் அண்ணியே..''
மனோவிற்கோ முகமெல்லாம் குப்பென்று வேர்த்திட வாயை உள்ளங்கையால் மூடிக்கொண்டவன் ஒரு நொடி தடுமாறித்தான் போனான் விசாவின் துடுக்குத்தனமான பேச்சினில்.
''விசா.. என்ன பேசற நீ! அவர் நம்ப கெஸ்ட்!''
என்ற அமராவோ தம்பியின் லவ் இன்ட்ரெஸ்ட்டின் காதை ரகசியமாய் கடிக்க, ப்ரீதனோ சிரிப்பை அடக்க முடியாது பாவமாய் பார்த்தான் மனோவை; சொன்னேனே பார்த்தாயா எனும் லுக்கில்.
''அவர் இப்போ என் அண்ணா! நான் என்ன சொன்னாலும் கேட்பாரு.. அப்படித்தானே அண்ணா..''
என்றவளோ மனோவை சிக்கலில் மாட்டி விட பார்க்க,
''நல்ல நாள் பார்த்து சொல்றேன்..''
என்றவனோ காரில் ஏறி அமர்ந்தான் உதடு கடித்த புன்னகையோடு.
அவன் பதிலில் அமராவின் விழிகள் ரெண்டும் பொத்துக் கொண்டு வெளியில் வர பார்க்க, விசிலடித்து ப்ரீதனை அழைத்த மனோவோ சைகையால் அவன் நம்பரை அமராவிடத்தில் கொடுக்க சொல்லி கிளம்பினான்.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 72
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.