What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 35

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
513
அத்தியாயம் 35

மாதங்கள் கடகடவென ஓட அவிரனின் பிலிப்பைன்ஸ் ப்ரொஜெக் ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது.

ஆணவன் கிளம்பி தாயகம் திரும்ப மூன்றை மணி நேர விமான பயணத்தில் ஜிம்காரனின் எண்ணமெல்லாம் பேசாதிருக்கும் பொஞ்சாதியின் மீதே இருந்தது.

குறித்த தேதியை விட ஓரிரு நாட்கள் முன்பாகவே வேலைகள் முடிய கிளம்பி விட்டான் விரன் சொந்த நாட்டிற்கு. இருப்பினும், ஆணவன் அவன் வருகையை யாரிடமும் தெரிவிக்கவில்லை. மாறாக, சர்ப்ரைஸ் விசிட் அடிக்க நினைத்தான் வீட்டிற்கு.

ஆகவே, இன்ஸ்டாவில் கூட பணி முடிந்த இறுதி நாளென்று நடிகரோடு போஸ்ட் போட்டானே தவிரே அவன் மலேசியா திரும்பும் எவ்வித தகவல்களையும் பதிவுகளாக ஆப்டேட் செய்யவில்லை.

அதுவும் ரகசியமாய் போய் நின்று சின்ன டிக்கியை அதிர்ச்சியாக்க காத்திருந்தான் விரன். அதுவும் அவளை கட்டிலில் கிடத்தி முறைத்துக் கொண்டிருப்பவளின் மூச்சு முட்ட முக்கனிகளையும் ருசித்திட வேண்டுமென்று எண்ணங்கொண்டான் விரன் சிறு முறுவலோடு விமான ஜன்னலோரம் அமர்ந்தப்படி.

பாவம் அவிரன் சிங்கவன் எப்படி தெரியும் ஆணவனுக்கு ஆளனின் நனவெல்லாம் கனவாகவே போக போகிறதென்று.

முறைத்துக் கொண்டு செல்ல ஊடல் கொண்டாலுமே அவ்வப்போது பேசியும் பேசாதும் முரண்டு பிடித்திருந்த பாவையோ ஆகஸ்டின் கடைசி இரு வாரங்களில் விரனிடத்தில் டூ விட்டிருந்தாள் எவ்வித பேச்சு வார்த்தையுமின்றி மீண்டும் வீடியோ கோல் பஞ்சாயத்தாகி போக.

எப்படியும் ஓரிரு நாட்களில் வந்திட போகும் கணவனவனை ஒரு வழியாக்கியே ஆகா வேண்டுமென்ற தீர்மானத்தோடு பஞ்சணைக்கு புது ட்ரஸ் கொடுத்து அறையையே வேலைக்காரர்கள் கொண்டு புது செட்டாப் செய்திருந்தாள் அறை ரொமாண்டிக் சிவப்பில் குளித்திருக்க.

வந்ததும் வராததுமாய் குளிக்க போகும் விரனை சிங்கள் பீஸ் கூட இன்றி அறையை சுற்றி ஓட விட வேண்டுமென்ற உறுதியோடு இருந்தாள் சின்ன டிக்கியவள்.

எல்லாம் அம்மணியை ஆறு மாசம் தவிக்க விட்டு போன கடுப்புதான் மேடமுக்கு. அதுவும் வீடியோ கோல் வெட் செட்டுக்கு வேறு நோ சொல்லி அட்வைஸ் செய்பவனை வேறெப்படி பாலி தீர்த்திட முடியும் அலரவலாள்.

ஆகவே, அலமாரியிலிருந்த விரனின் அத்தனை ஆடைகளையும் பெரிய ட்ரவலிங் பேக்கிற்கு ஷிஃப்ட் செய்தாள் சீமாட்டியவள்.

அந்நேரம் பார்த்து பூவையின் கையில் வந்து விழுந்தது கரகாட்ட கனகாவின் ட்ரஸ். அதை கையில் தாங்கியவளுக்கோ சிரிப்பை அடக்கிட முடியவில்லை.

போனை எடுத்தவள் இன்ஸ்டா பக்கம் போய் ட்ரஸின் படத்தை பதிவேற்றி இப்படி எழுதினாள்.

''When my man gave me a Karakatta Kanaga dress so he could go down easily to impress me🤭 ha ha ha🤣 don't think 😜 bad yaar😒🤨 he just wants to save the world before the earth falls for my sexiest half naked legs❣️😜!''
(என் புருஷன் கரகாட்டம் கனகா மாதிரியான ட்ரஸ் ஒன்னே எனக்கு வாங்கி கொடுத்து கீழிறங்கி என்னே மடக்க பார்க்க.. ஹா ஹா ஹா.. பிளீஸ் யாரும் தப்பா நினைக்காதீங்க.. அவர் கீழே இறங்கறது வேறெதுக்காகவும் இல்லே.. இந்த பூமியே என்னோட கவர்ச்சியான காலழகிலிருந்து மயங்கிடாமே காப்பாத்தத்தான்!)

கமெண்ட்ஸ்களும் லைக்ஸ்களும் அள்ள அவ்வாடையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு மஞ்சம் சரிந்தாள் நிழலிகா.

பெண்ணவளின் எண்ண ஓட்டமோ அன்றைய சம்பவங்களை நோக்கி ஓடியது.

கல்யாணமாகி என்னதான் பம்பரமாய் அருணியவள் சுழன்றாலும் ஞாயிறு அவளுக்கும் விடுப்பு கடைக்கும் அடைப்பு.

வார இறுதியில் பெரியளவில் வீட்டில் குக்கிங்ஸ் இருக்காது காரணம் பொதுவாகவே ரேக்கா அன்றைய நாளை கடை சாப்பாட்டுக்கு நேந்து விட்டிருந்தார் சரணின் தொல்லையால்.

ஆகவே, சின்ன டிக்கியவளோ பத்து மணிக்கு அலாரமை செட் செய்து ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்த அன்றைய நாளென்று பார்த்து கை பரபரவென்று அரிக்க ஒரு வாலி தண்ணீரை கொண்டு வந்து ஊற்றினான் விரன் பொண்டாட்டியின் மீது.

தெரித்தெழுந்தவள் ஆடி போய் முன்னிருந்தவனை நோக்க,

''என்னடி தூக்கம் வேண்டி கிடக்குது உனக்கு!!''

''ஏன்டா குட்டி குஞ்சா!! இந்த கேள்வி கேட்கவாடா ஒரு வாலி தண்ணியே வேஸ்ட் பண்ணே நீ!''

என்றவளோ முகத்தில் படர்ந்திருந்த நீரை கையால் வழித்தெடுத்து போட்டிருந்த நைட்டியை கழட்ட,

''ஏய்! ஏய்! ஏய்! என்னடி பண்றே!''

என்றவனோ பதறி போனான் தனியறைக்குள் அவளிடம் வசமாய் சிக்கி கொண்டானோ என்றெண்ணி.

''என்னடா குட்டி குஞ்சா இது.. பார்த்தாலே தெரியலையா எப்படி தொப்பையா இருக்கேன்னு..''

''அதுக்கு.. நீ இப்படியே இங்கையே ட்ரஸ் கழட்டுவியா!''

என்றவனோ வாலியை முன்புறமாய் பதுக்கி பின்னோக்கினான் தூங்கியவன் விழிக்க வல்லபியின் கட்டுக்குலையா அழகில்.

''அப்பறம் வேறெங்கே கழட்டறது!''

என்றவளோ டூ பீஸோடு அவனை நெருங்க வாலியை பறக்க விட்டவனோ,

''ஆளா விடுடி ஆத்தா!!''

என்றவனோ தப்பித்தோம் பிழைத்தோம் என்றவாறு அதிகாலை ஐந்துக்கு அவனறையிலி
ருந்து ஓட்டமெடுத்தான் வாஷ் ரூம் போயி ஆகா வேண்டிய நிர்பந்தத்தில்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 35
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top